இனிய நண்பர் இன்னும் பல ஆண்டுகள் மக்களை மகிழ்விக்கட்டும்: ரஜினிக்கு ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து 

ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின் | கோப்புப் படங்கள்
ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின் | கோப்புப் படங்கள்
Updated on
1 min read

இனிய நண்பர் ரஜினிகாந்த் இன்னும் பல ஆண்டுகள் மக்களை மகிழ்விக்கட்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1975-ல் இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ரஜினிகாந்த் 45 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டார் என்ற அடையாளத்துடன் மிளிர்கிறார். அவரது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

ரஜினிகாந்துக்கு இன்று பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்களும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:

''உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் ரஜினிகாந்துக்குப் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்! 72ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் அவர், இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களைத் தன்னிகரற்ற தனது திரையாளுமையால் மகிழ்விக்கவும், நல்ல உடல் நலத்துடன் திகழவும் விழைகிறேன்''.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ரஜினிகாந்துக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in