திண்ணை பிரச்சாரத்தில் தீவிரம் காட்டும் பாமக: 30 ஆயிரம் கிராமங்களில் மக்களை சந்திக்க திட்டம்

திண்ணை பிரச்சாரத்தில் தீவிரம் காட்டும் பாமக: 30 ஆயிரம் கிராமங்களில் மக்களை சந்திக்க திட்டம்
Updated on
2 min read

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாமகவினர் திண்ணை பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2010-ம் ஆண்டு நடந்த பென்னாகரம் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக கட்சிகள் போட்டியிட்டன. இத்தொகுதியில் 2 முறை வெற்றி பெற்ற பாமக தலைவர் ஜி.கே.மணி யின் மகன் தமிழ்க்குமரன், பாமக வேட்பாளராக நிறுத்தப்பட்டார். திமுக சார்பில் இன்பசேகரன் போட்டி யிட்டார். வன்னியர்கள் நிறைந்த இத்தொகுதியில் வெற்றி பெற்று விடலாம் என்ற நோக்கில் பாமக முதல்முறையாக திண்ணை பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியது.

இதற்கு அப்பகுதி மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. அந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர் இன்ப சேகரன் 77,637 வாக்குகள் பெற்று வென்றார். பாமக வேட்பாளர் தமிழ்க்குமரன் 41,285 வாக்குகள் பெற்று 2-ம் இடம் பிடித்தார். அதிமுக வேட்பாளர் அன்பழகன், தேமுதிக வேட்பாளர் காவேரிவர்மன் மற்றும் 27 சுயேச்சை வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

திண்ணை பிரச்சாரத்தின் பலனை நன்கு அறிந்த பாமகவினர், 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்ட தருமபுரி தொகுதியில் தீவிர திண்ணை பிரச்சாரம் மேற் கொண்டனர். இதனால், அந்தத் தொகுதியில் அன்புமணி வெற்றி பெற்றார்.

அதுபோலவே, இப்போது சட்டப் பேரவைத் தேர்தலிலும் திண்ணை பிரச்சாரத்தை பாமகவினர் கையில் எடுத்துள்ளனர். எவ்வித ஆரவார மும் இல்லாமல் கிராமங்கள், குக்கிராமங்களில் திண்ணை பிரச் சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அந்தந்த பகுதி பாமக நிர் வாகிகள், குறிப்பிட்ட கிராங்களை தேர்வு செய்து, மாலை அல்லது இரவு நேரத்தில் அங்கு செல்வர். அங்கிருக்கும் பெரியவர்களை அழைத்து திண்ணையில் அமர்ந்து உறவினர்களிடம் பேசுவது போல இயல்பாக பேசத் தொடங்கு கின்றனர். அதைப் பார்த்து ஊரில் உள்ள மற்ற பெரியவர்கள் பலரும் அங்கு வருகின்றனர். அவர்களிடம் முதலில் நலம் விசாரித்துவிட்டு, ஊரில் தண்ணீர், சாலை, பள்ளிக் கூடம், சுகாதார வசதி எல்லாம் எப்படி இருக்கிறது? என்று கேட்கின்றனர். உங்கள் எம்எல்ஏ தொகுதிக்கு அடிக்கடி வருகிறாரா? எத்தனை பேருக்கு படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைத்திருக்கிறது? என்று விசாரிக்கின்றனர்.

பின்னர், ‘திமுக, அதிமுகவால் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியவில்லை. அன்புமணி ராமதாஸ், தமிழக மக்கள் மேம் பாட்டுக்காக வித்தியாசமாக சிந்தித்து பல்வேறு திட்டங்களை வைத் திருக்கிறார். அவரை முதல்வர் ஆக்குவதற்கு பாமக வேட்பாள ருக்கு வாக்களியுங்கள்’ என்று கேட்டுவிட்டு, அடுத்த கிராமத்துக்கு போகின்றனர். இதுகுறித்து பாமக நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘திண் ணைப் பிரச்சாரத்துக்காக ஒரு தொகுதிக்கு 25 குழுக்களை நிய மித்துள்ளோம். ஒவ்வொரு குழுவி லும் 5 பேர் முதல் 10 பேர் வரை உள்ளனர். ஒவ்வொரு குழுவும் தினமும் அதிகபட்சம் 5 கிராமங் களில் பிரச்சாரம் செய்யும். தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் கிராமங்களில் திண்ணை பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in