

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவித்துக் கொண்ட கையெழுத்துப் பிரதி ஒன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் ஒட்டப்பட்டிருந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் விதிகளுக்குப் புறம்பானது என அதனை அலுவலர்கள் அகற்றினர்.
துண்டுப் பிரசுரத்தை ஒட்டிய திருமயம் அருகேயுள்ள கொன்னையம்பட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமியை கேட்டபோது, “நான் அதிமுகவில் இளைஞரணி பொறுப்பில் இருக்கிறேன். திருமயம் தொகுதியில் போட்டி யிட உறுதியாக எனக்கு சீட் கிடைக்கும். இது மற்றவர்களுக்கு தெரியவேண்டும் என்பதற் காகவே துண்டுப் பிரசுரங்களை ஒட்டியுள்ளேன்” என்றதுடன் வாக்குறுதிகளையும் அள்ளி வீசினார்.
அவரைப் பற்றி அதிமுக நிர்வாகிகளிடம் கேட்டால் ‘அவர் கட்சியில் பொறுப்பில் இருக் கிறாரா என்பதே தெரியவில்லை’ என்கின்றனர்.