கருணாநிதியுடன் குலாம்நபி ஆசாத் இன்று சந்திப்பு

கருணாநிதியுடன் குலாம்நபி ஆசாத் இன்று சந்திப்பு
Updated on
1 min read

திமுக தலைவர் கருணாநிதியுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்துவதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் இன்று சென்னை வர இருப்பதாகக் கூறப்படுகிறது.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன.

இதில் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் காங்கிரஸுக் கான தொகுதிகளின் எண் ணிக்கையை முடிவு செய்வது தொடர்பாக கருணாநிதியுடன் பேச்சு நடத்த குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோர் இன்று சென்னை வர இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2011 பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு 63 தொகுதிகளை திமுக ஒதுக்கியது. இந்த முறையும் அதே அளவுக்கு ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், 40 தொகுதிகள் வரை ஒதுக்க திமுக சம்மதித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in