

பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஆர்.எஸ்முருகன், வி.குமார் இருவரும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத் தின் ஆதரவாளர். இவர்கள் உயர் நீதிமன்ற கிளையில் நேற்று தாக்கல் செய்த மனு:
குமாரசாமி என்பவரை ஜாதியை சொல்லி திட்டியதாக எங்கள் மீது போலீஸில் அவர் புகார் அளித்தார். இந்தப் புகாரின்பேரில் எங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் நெல்லை 2-வது கூடுதல் அமர்வு நீதிமன் றத்தில் (தீண்டாமை வழக்குக் கான சிறப்பு நீதிமன்றம்) சர ணடைய முடிவு செய்துள் ளோம். சரணடையும் நாளில் ஜாமீன் மனு தாக்கல் செய்யும் பட்சத்தில், எங்களின் ஜாமீன் மனுவை அன்றைக்கே விசா ரித்து அதன் மீது உத்தரவு பிறப் பிக்க வேண்டும் என நெல்லை நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டுள் ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.