

சாதாரண மனிதன் முதல் சமூகத்தில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் வரையில் சாலை விபத்துகளில் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாடு முழுவதிலும் சாலை விபத்துகளால் கொத்துக் கொத்தாக இறப்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது.
கடந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளால் 10 லட்சத்து 25 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது. இவற்றில் 90 சதவீத இறப்புகள் ஏழை மற்றும் நடுத்தர பொருளாதார நாடுகளில் நடந்துள்ளன என கூறியுள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் சாலை விபத்துகளால் சராசரியாக ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் இறக் கின்றனர். 4 நிமிடங்களுக்கு ஒருவர் சாலை விபத்தால் இறக்கிறார். தினமும் 16 குழந்தைகள் உயிரிழக் கின்றன. சராசரியாக தினமும் நடக்கும் 1,214 சாலை விபத்துகளில் 400 பேர் இறக்கின்றனர். இவர் களில் 25 சதவீதம் பேர் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் என மத்திய அரசு சமீபத்தில் வெளி யிட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக் கின்றன. நாடு முழுவதும் சாலை விபத்துகளில் சிக்குவோரை மீட் பது, சிகிச்சை அளிப்பது உள் ளிட்டவற்றுக்காக ஆண்டுக்கு ரூ.3.8 லட்சம் கோடி செலவிடப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் மொத் தம் 15 ஆயிரத்து 642 பேர் உயிரிழந் துள்ளனர். 2014-ம் ஆண்டுடன் ஒப் பிடுகையில் 452 பேர் அதிக மாக இறந்துள்ளனர். தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நகரமய மாக்கல் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கு ஏற்றவாறு சாலைகள் விரிவாக் கம், மேம்பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், மற்றொரு புறம் சாலை விபத்துகளால் இறப் பவர்களின் எண்ணிக்கையும் அதிக ரித்துக் கொண்டே வருவது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் விபத்துகளை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவில் ஆக் ஷன் குரூப் (சிஏஜி) என்ற அமைப்பு ஆலோசனை வழங்கி வருகிறது. சிஏஜி அமைப்பின் இயக்குநர் (ஆலோசகர்) எஸ்.சரோஜா கூறும்போது, ‘’50 சதவீத சாலை விபத்துகளுக்கு ஓட்டுநர் களின் கவனக் குறைவுதான் முக்கிய காரணமாக இருக்கிறது. வாகன ஓட்டுநர்களுக்கு போதிய பயிற்சி இன்மை, ஓட்டுநர்கள் உரிமம் வழங் குவதில் விதிமீறல்கள், பாதசாரிகள் சாலை விதிமுறைகளை மீறுவது, மோசமான சாலைகள், தேவை யான இடங்களில் சாலை விரிவாக் கம் நடைபெறாதது, சிக்னல் முறை களை சரியாக பின்பற்றாதது ஆகி யவை இதர காரணங்களாக உள்ளன.
உலக நாடுகள் பல வற்றில் நடந்து செல் பவர்களுக்கும், மிதி வண்டி பயன்படுத்து வோருக்கும் முதல் மரியாதை கொடுக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாது காப்புக்கு ஒரு விதத்தில் இவர்கள் காரணமாக இருக்கின் றனர். ஆனால், நம் நாட்டில் இது எதிர்மறையாக இருக் கிறது. சாலை விதிகளை கடைப் பிடிப்பது என்பது தனி மனித ஒழுக்க முறையாக ஒவ்வொரு மனிதனிடமும் மாற வேண்டும். அப் போதுதான், சாலை விபத்துகளை நம்மால் குறைக்க முடியும்’’ என்றார்.