

ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஏப்ரல் முதல் ஜூன் வரை கருவூலத்தில் நேரில் ஆஜராகி நேர்காணலை பதிவு செய்ய வேண்டும். நேரில் வர இயலாதவர்கள் வாழ்வுசான்றை கரு வூலத்துக்கு அனுப்ப வேண்டும் என்று கருவூல கணக்கு இயக்குநர் தெரி வித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாவட்ட கருவூலங்கள் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கருவூலத்தில் நேரடியாக ஆஜராகி நேர்காணலை பதிவு செய்ய வேண்டும். நேரில் வர இயலாதவர்கள் வாழ்வுச் சான்று பெற்று கருவூலத்துக்கு அனுப்ப வேண்டும். ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை நேர்காணலுக்கு ஆஜராகி பதிவு செய்ய வேலை நாட்களில் வர வேண்டும்.
நேரில் வருபவர்கள் ஓய்வூதியப் புத்தகம், நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கு எண் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். இதுவரை ஆதார் அட்டை, வருமான வரி கணக்கு எண், குடும்ப அடையாள அட்டை சமர்ப்பிக்காதவர்கள், மேற்படி ஆவணங் களின் நகல்களுடன் தங்களின் ஓய்வூதிய கொடுவை ஆணை எண்ணை (பிபிஓ எண்) குறிப்பிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
நேரில் வர இயலாதவர்கள் ஓய்வூதி யப் புத்தகம், நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கு எண், ஆதார் அட்டை, வருமான வரி கணக்கு எண், குடும்ப அடையாள அட்டை போன்ற ஆவணங் களின் நகல்களுடன் வாழ்வு சான்றை உரிய படிவத்தில் ஓய்வூதியம் பெறும் கரு வூலத்துக்கு அனுப்ப வேண்டும். வாழ்வு சான்று படிவத்தை www.tn.gov.in/karuvoolam/ என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஓய்வூதிய வங்கிக் கணக்கு உள்ள கிளை மேலாளர் அல்லது அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர் அல்லது வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் அல்லது வருவாய் ஆய்வாளரிடம் சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும். வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியர்கள் அங்குள்ள மாஜிஸ்திரேட், நோட்டரி, வங்கி மேலாளர் அல்லது இந்திய தூதரக அலுவலரிடம் வாழ்வு சான்று பெற்று, சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
ஓய்வூதியர்கள் தங்களது ஆதார் எண்ணை கருவூலத்தில் பதிவு செய்து, இணையதள வழி சேவையைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது jeevan praman என்ற இணையதளம் வழியாக ஓய்வூதியரின் ஆதார் எண் பதிவு செய்யப்பட்டு, ஓய்வூதியர் தங்களது வாழ்வு சான்றினை இணையதளம் மூலமாகவே பதிவு செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. வெளி நாட்டில் வாழும் ஓய்வூதியர்களும், குடும்ப ஓய்வூதியர்களும் ஆதார் எண் பெற்று jeevan praman portal-ல் பதிவு செய்திருந்தால் வாழ்வு சான்றை இணைய தளம் மூலமே பெற்றுக் கொள்ளலாம். மேலும் குடும்ப ஓய்வூதியர்கள் (நேரில் வருபவர்கள், நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள்) மறுமணம் புரியவில்லை என்பதற்கான உறுதிமொழியினை சமர்ப் பிக்க வேண்டும்.
ஓய்வூதியர்கள் தற்போதைய இருப்பிட முகவரி, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி (இருப்பின்) ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும். ஓய்வூதியர்கள் நேர்காணலுக்கு வரத் தவறினாலோ அல்லது சான்றொப்பம் செய்யப்பட்ட வாழ்வு சான்றினை அனுப்பத் தவறினாலோ ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் வரும் ஆகஸ்டு மாதம்முதல் நிறுத்தப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.