

அப்துல்கலாம் லட்சிய இந்தியா கட்சியின் தலைமை வழிகாட்டி வெ.பொன்ராஜ் மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறிய தாவது:
வாட்டர் எய்டு குளோபல் அறிக்கையின்படி, தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் 15,384 பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை. இதை மக்களுக்கு கொடுக்க தவறியது திமுக, அதிமுக மற்றும் மத்தியில் ஆண்ட காங்கிரஸ், பாஜக கட்சிகளே. நநிநீரை இணைப்போம் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுவதுடன் சரி.
அரசியல்வாதிகள் ஏமாற்றிய தால், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் ஒரு குடும்பம் சுத்தமான குடிநீருக்காக ஒரு நாளைக்கு ரூ. 48.45 செலவிட வேண்டியுள்ளது. இதற்காக 5 ஆண்டுகளில் மொத்த செலவு ரூ.87,210 ஆகிறது. கட்சிகள் பல வழிகளில் ஏமாற்றியுள்ளதை கணக்கீடு செய்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏற்படும் இழப்பு கணக்கிடப்படும்.
வாக்குகளை விற்காதீர்..
5 ஆண்டுகளில் குடிநீருக்காக மட்டுமே இழப்பு ரூ.87,210 என்பதால் இதுவே ஒரு வாக்கின் மதிப்பு. ரூ.500, ரூ. 1000-க்காக வாக்குகளை விற்றுவிடாதீர். பணம் கொடுக்க வரும் கட்சியினரிடம் அந்த தொகையை கேளுங்கள். ஆறுகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றிவிட்டு வந்தால் வாக்களிப்பதாகக் கூறி அனுப்பி விடுங்கள். வாக்குகளை பணத்துக்கு விற்காதீர் என்பதே எங்கள் கட்சியின் கொள்கை. இவ்வாறு அவர் கூறினார்.