தமிழக மீனவர்கள் 23 பேருக்கு 2-வது முறையாக காவல் நீட்டிப்பு

தமிழக மீனவர்கள் 23 பேருக்கு 2-வது முறையாக காவல் நீட்டிப்பு
Updated on
1 min read

கடந்த மார்ச் 14-ம் தேதி பாம்பன் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத் தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

மார்ச் 15-ம் தேதி அதி காலை நாட்டுப் படகு மீனவர்கள் தலைமன்னார் அருகே மீன்பிடித் துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற் படையினர், எல்லை மீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன்பிடித்த தாகக் கூறி 3 நாட்டுப்படகுகளைக் கைப்பற்றி அதிலிருந்த 23 பாம்பன் மீனவர்களை சிறைபிடித்து வவுனியா சிறைச்சாலையில் அடைத்தனர்.

மீனவர்களின் காவல் திங்கள் கிழமையுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மார்ச் 24-ம் தேதி வரையிலும் காவல் நீட்டிக்கப்பட்டு வவுனியா சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.

மேலும் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு கஞ்சா கடத்தி வந்த குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 2 பேர் யாழ்ப்பாணம் பருத்தித் துறை நீதிமன்றத்தில் திங்கள் கிழமை ஆஜர்படுத்தப்பட்டு ஏப். 4-ம் தேதி வரையிலும் நீதிமன்றக் காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in