குற்றாலம் அருவிகளில் டிச.20 முதல் குளிக்க அனுமதி

குற்றாலத்தில் மழை அளவு குறைந்துள்ள நிலையில் பிரதான அருவியில் நேற்று மாலை மிதமான தண்ணீர் கொட்டியது.
குற்றாலத்தில் மழை அளவு குறைந்துள்ள நிலையில் பிரதான அருவியில் நேற்று மாலை மிதமான தண்ணீர் கொட்டியது.
Updated on
1 min read

குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிக்க டிசம்பர் 20-ம்தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டுஉள்ளது.

கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு 9 மாதங்களுக்கும் மேல் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதன்பின் தொற்று குறைந்ததால், கடந்த ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி முதல் அருவிகளில் குளிக்க மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், கரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த மே மாதம் முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டது. சுமார் 7 மாதங்களுக்கு பின்னர், வரும் 20-ம் தேதி முதல் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் அருவிகளில் குளிக்கலாம். பிரதான அருவியில் ஆண்கள் பகுதியில் ஒரு நேரத்தில் 10 பேர், பெண்கள் பகுதியில் ஒரு நேரத்தில் 6 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஐந்தருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தலா 10 பேர், பழைய குற்றாலம் அருவியில் ஆண்கள் பகுதியில் 5 பேர், பெண்கள் பகுதியில் 10 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருவி பகுதிகளின் பாதுகாப்பு, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அறிக்கைஅளிக்க, கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து, தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in