

தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் மூலம் மலிவு விலை 'அம்மா' உப்பு விற்பனையை தலைமைச் செயலகத்தில் நடந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், 'தமிழ்நாடு உப்பு நிறுவனம் பொதுமக்கள் பயன்பெறும் பொருட்டு ஏற்கெனவே அயோடின் கலந்த உப்பு தயாரித்து நியாய விலைக் கடைகளின் மூலம் விற்பனைக்கு வழங்கி வருகிறது.
முன் கழுத்துக் கழலை மற்றும் இரத்த சோகை நோயைத் தடுக்க உதவும் இரும்பு மற்றும் அயோடின் சத்துக்கள் கலந்த இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பும், இரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்த குறைந்த அளவு சோடியம் கொண்ட உப்பும் தமிடிநநாட்டில் வெளிச்சந்தையில் அறிமுகப்படுத்திட முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் மூலம் 'Amma Salt' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இரும்பு மற்றும் அயோடின் சத்துக்கள் கலந்த “இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பு” “குறைந்த அளவு சோடியம் கொண்ட உப்பு” மற்றும் “சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த உப்பு” ஆகிய உப்பு வகைகளை முதல்வர் அறிமுகப்படுத்தி வெளிச்சந்தை விற்பனையினைத் துவக்கி வைத்தார்.
தனியார் நிறுவனங்களால் தயாரிக்கப்படும் உப்பு வகைகளான இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பு கிலோ 21 ரூபாய்க்கும், குறைந்த அளவு சோடியம் கொண்ட உப்பு கிலோ 25 ரூபாய்க்கும் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த உப்பு கிலோ 14 ரூபாய் முதல் 21 ரூபாய் வரையிலும் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படும் நிலையில் வெளிச்சந்தையில் என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உப்பு வகைகள் முறையே 14 ரூபாய், 21 ரூபாய் மற்றும் 10 ரூபாய் என குறைந்த விலையில் விற்கப்படும்.
இந்த உப்பு வகைகளை தமிழக அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு உப்பு நிறுவனம் தயாரிக்கிறது. சிப்காட் தொழிற்பேட்டைக்கு அருகில் அமைந்த பகுதிகளிலுள்ள குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்காக, அந்த பகுதிகளில் சிப்காட் நிறுவனம் மூலம் 2 பயிற்சி மையங்களை ஏற்படுத்திட தமிழக அரசு வழி வகை செய்துள்ளது.
இரும்பு மற்றும் அயோடின் சத்து கலந்த உப்பு, சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த உப்பு, குறைந்த அளவு சோடியம் கொண்ட உப்பு என 3 வகையான உப்புகள் விற்பனை செய்யப்படுகிறது. முதல் வகை உப்பு ரூ.14-க்கும், இரண்டாம் வகை உப்பு ரூ.10-க்கும், 3-வது வகை உப்பு ரூ.21-க்கும் விற்கப்பட உள்ளது.