Last Updated : 07 Dec, 2021 08:42 PM

 

Published : 07 Dec 2021 08:42 PM
Last Updated : 07 Dec 2021 08:42 PM

விபத்தில்லாத கோவை மாநகர்: பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்க காவல்துறையினர் அழைப்பு

கோவை

விபத்தில்லாத கோவை மாநகரை உருவாக்க, பொதுமக்கள் தங்களது கருத்துகளை தொலைபேசி, வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக தெரிவிக்கலாம் என மாநகர காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

கோவை மாநகர காவல்துறையினர் இன்று (டிச. 07) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் உத்தரவின் பேரில், ‘விபத்தில்லா கோவை மாநகரை’ உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, எஜூகேஷன், என்போர்ஸ்மென்ட், இன்ஜினியரிங் (இஇஇ) என்ற திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டதன் பேரில், கோவை மாநகர காவல்துறையின் சார்பில், பல்வேறு நடவடிக்கைள் எடுக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் தொடர்்ச்சியாக, கோவை மாநகர காவல் ஆணையர் முக்கிய சந்திப்புப் பகுதிகளை தேர்வு செய்து, ‘போக்குவரத்து விதிமீறல் இல்லாத சந்திப்பு’ என தேர்ந்தெடுக்கப்பட்டு, விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள்.

கோவை மாநகர காவல் ஆணையரின் உத்தரவின்படி, போக்குவரத்துக் காவல்துறையினர் சிந்தாமணி சந்திப்பு, அவிநாசி சாலை அண்ணாசிலை சந்திப்பு ஆகிய இடங்களைத் தேர்வு செய்து, ‘போக்குவரத்து விதிமீறல் இல்லாத சந்திப்பு’ என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கோவை மாநகர் முழுவதும், முக்கிய சந்திப்புகளிலும் சுழற்சி முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் மூலம் அடிக்கடி சாலை விபத்துகள் நடக்கும் பகுதிகளை கண்டறிந்து,

சம்பந்தப்பட்ட அரசுத்துறையுடன் கலந்தாலோசித்து தேவையான கட்டமைப்பு வசதிகள் , எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன. மேலும், பள்ளி , கல்லூரி மாணவர்கள், கார், டேக்ஸி, மேக்சி கேப், ஆட்டோ, தனியார் பேருந்து மற்றும் அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சமூக வலைதளங்கள் :

விபத்தில்லா கோவை மாநகரை உருவாக்க, பொதுமக்களும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும், சாலை விதிகளை முறையாக பின்பற்றவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், பொதுமக்கள் தங்களது ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை, கோவை மாநகர காவல்துறையின் 94981-81213 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும், 81900-00100 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும், controlroomcbecity@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலும், @cbecitypoliceofficial என்ற முகநூல் பக்கத்திலும், @policecbecity என்ற ட்விட்டர் பக்கத்திலும் தங்களது தகவல்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x