வைகை ஆற்றில் 12 ஆயிரம் கன அடி நீர் திறப்பு: மதுரை உட்பட 5 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை

மதுரையில் இரு கரைகளைத் தொட்டபடி பாய்ந்தோடும் வைகையாற்று வெள்ளம். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரையில் இரு கரைகளைத் தொட்டபடி பாய்ந்தோடும் வைகையாற்று வெள்ளம். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
1 min read

மதுரை வைகை ஆற்றில் 12 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்வதால் ஆட் சியர் அனீஷ்சேகர் பார்வையிட்டு வெள்ள நீர் ஊருக்குள் புகாமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வடகிழக்கு பருவமழை உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பெரியாறு, வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

அதனால், பெரியாறு அணை அணை நீர்மட்டம் 142 அடியாக தொடர்ந்து தக்க வைக்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவால் அதற்கு மேல் அணையில் தண்ணீர் தேக்க முடி யாததால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வைகை அணைக்கு திறந்து விடப்படுகிறது.

பெரியாறு தண்ணீர், மூல வைகை ஆறு தண்ணீரால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வைகை அணை ஏற்கெனவே நிரம்பியதால் தற்போது அணையில் இருந்து வைகை ஆற்றில் 8,681 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

இந்த தண்ணீர் மட்டுமில்லாது ஆற்று வழித் தடங்களில் பெய்யும் மழை, சிற்றாறுகள் தண்ணீரால் மதுரை வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரை புரண் டோடுகிறது. ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகரிப்பால் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுபோல், திண்டுக்கல், சிவ கங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக் களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. இந்நிலையில், நேற்று ஆட்சியர் கரையோரப் பகுதிகளை பார்வையிட்டார். ஆற்று வெள்ளம் நகர் பகுதிகளுக்குள் புகுந்து விடாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in