Published : 07 Dec 2021 03:09 AM
Last Updated : 07 Dec 2021 03:09 AM

வரும் 11-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்; 2 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு: அமைச்சர் சி.வெ.கணேசன் நம்பிக்கை

தி.மலை அருணை பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ள வேலை வாய்ப்பு முகாமுக்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் சி.வெ.கணேசன் நேற்று ஆய்வு செய்தார். அருகில், ஆட்சியர் முருகேஷ் உள்ளிட்டோர்.

திருவண்ணாமலை

தி.மலையில் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் 2 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தருவோம் என தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தி.மலை அடுத்த தென்மாத்தூர் கிராமத்தில் உள்ள அருணை பொறியியல் கல்லூரியில் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் நேற்று மாலை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர், செய்தியாளர் களிடம் கூறும்போது, “தி.மலை மாவட்டத்தில் படிக்கும் மற்றும் படித்துள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தர பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இதற்காக வரும் 11-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் சுமார் 10 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்கி றோம். நேர் காணல் நடத்தப் பட்டு 2 ஆயிரத் துக்கும் மேற் பட்ட இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பை உரு வாக்கி தருவோம் என்ற நம்பிக்கை உள்ளது.படித்த தகுதி வாய்ந்த இளை ஞர் களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவதுதான் தமிழக அரசின் நோக்கம்” என்றார். அப்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வீர ராகவ ராவ், ஆட்சியர் பா.முருகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x