Published : 08 Mar 2016 07:52 AM
Last Updated : 08 Mar 2016 07:52 AM

திமுக, காங்கிரஸ் கூட்டணி புதிய வரலாறு படைக்கும்: தி.க. தலைவர் கி.வீரமணி உறுதி

தமிழக காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவர் ஈ.வி.கே.சம்பத் 91-வது பிறந்தநாள் விழா, தேசிய முரசு வாசகர் வட்டம் சார்பில் சென்னை சத்தியமூர்த்திபவனில் நடந்தது. காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் ஆ.கோபண்ணா வரவேற்றார்.

விழாவில் ஈவிகேஎஸ் இளங் கோவன் பேசும்போது, ‘‘பெரியார், அண்ணா, காமராஜர் காலத்தில் அரசியலில் நாகரிகம் இருந் தது. யாரும் யாரையும் தரக் குறைவாகப் பேசியதில்லை. இப்போது நிலைமை தலைகீழாக இருக்கிறது. தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளாக எந்த நல்ல காரியமும் நடக்கவில்லை. அன்றைய அமைச்சர்களின் வரலாறு, சாதனைப் பட்டியல் வேறு, இப்போதைய அமைச்சர்களின் சாதனை வேறாக இருக்கிறது’’ என்றார்.

பழ.கருப்பையா:

காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் காமராஜர் பெயரை காமராஜர் என்றே அழைத்துப் பேசலாம். அது அந்தக்காலம். புருஷன் பெயரை மனைவி சொல்லாமல் இருப்பதுபோல, இப்போது கட்சித் தலைவர்கள் பெயரை தொண்டர்கள் சொல்வதில்லை. இந்த ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும். அதை கருணாநிதியும், இளங்கோவனும் பார்த்துக் கொள்வார்கள் என்று இருந்துவிடக் கூடாது. நானும், இளங்கோவனுடன் சேர்ந்து பொது எதிரியை வீழ்த்த வேண்டும் என்பதைவிட அவரவர் பங்கை கண்டிப்பாகச் செய்ய வேண்டிய காலம் இது. சேருவது, விலகுவது எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். எந்த வகையி லாவது இந்த ஆட்சியை வீழ்த்த வேண்டும்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி:

அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய விழாவாக இது அமைந்துள்ளது. திமுக, காங்கிரஸ் கூட்டணி இத்தேர்தலில் புதிய வரலாற்றை நிகழ்த்தப் போகிறது. தீயை அணைப்பது முக்கியம். அதை அணைக்க யார், யார் வருகிறார்கள் என்று பார்க்க வேண்டும். அதில் யார் மணல், தண்ணீர் எடுத்து வருகிறார்கள், யார் பெட்ரோல் எடுத்து வருகிறார்கள் என்று கண்டறியும் ஆற்றல் திமுக, காங்கிரசுக்கு உண்டு. மற்றவர்களும் இந்த கூட்டணிக்கு வந்தால் அவர்களுக்கு நல்லது. இந்த கூட்டணிக்கு இனி யார் வந் தாலும், வராவிட்டாலும் இந்த தேர் ஓடும். அதை நாம் இழுப்போம். என்றார்.

விழாவில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன், தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு உள்ளிட்டோர் கலந்துகொண் டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x