தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Updated on
1 min read

தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (டிச.6) தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தருமபுரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.

டிச.7-ம் தேதி தென் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். டிச.8-ம் தேதி கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

டிச.9-ம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொடுமுடி, ஆனைபாளையத்தில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மத்திய மேற்கு வங்கக்கடல்பகுதியில் நிலவும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த6 மணி நேரத்தில் வலுவிழந்து,காற்றழுத்த தாழ்வு பகுதியாக ஒடிசா கடற்கரையோரம் நிலைகொள்ளும்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன்நேற்று வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட் டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in