

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் கூறி யிருப்பதாவது: வரும் கோடை காலத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எர்ணா குளத்தில் இருந்து அடுத்த மாதம் 10-ம் தேதி இரவு 7 மணிக்கு புறப் படும் சுவிதா அதிவிரைவு சிறப்பு ரயில் (00604) மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந் தடையும். இந்த சிறப்பு ரயில் திருச் சூர், பாலக்காடு, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் மற்றும் காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு (18-ம் தேதி) இன்று தொடங்குகிறது.