

சிங்கப்பூரில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு வந்த விமான பயணி ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உள்ளதாக என, ஆய்வு செய்யப்படுவதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மதுரை விமான நிலையத்தில் துபாய், மற்றும் சிங்கப்பூரிலிருந்து இலங்கை வழியாக வந்த பயணிகளிடம் சுகாதாரத்துறையினர் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் துபாயிலிருந்து 128 பயணிகளும், இலங்கையிலிருந்து 151 பேரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதில் நாகர்கோவில் ஆசாரி பள்ளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று கண்டறியப் பட்டது. அவருடன் வந்த அவரது மனைவி, மகனுக்கும் பரிசோதனை செய்தனர். இருவருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், ஒருவருக்கு மட்டும் கரோனா தொற்று காணப்பட்டதால் அவர் ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஒமைக்ரான் தொற்று உள்ளதா என, ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக சுகாதாரத்துறையின் தெரிவித்துள்ளது.
இதனிடையே தொற்று பாதித்தவரின் மனைவி , மகன் மற்றும் பிற பயணிகளும் 15 நாள் தனிமையில் இருக்க, சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை கண்காணிக்க, வருவாய், காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.