

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டு நினைவுதினத்தை தொடர்ந்து அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுத் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் மலரஞ்சலி வைத்து மரியாதை செய்தனர். இதில் மாவட்ட, மாநில நிர்வாகிகள் அதிமுக தொண்டர்கள், எம்.எல். ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
மரியாதை செலுத்திய பிறகு, ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் அதிமுக தொண்டர்கள் ” அதிமுகவை அழித்திடலாம் என பகல்கனவு காண்போரின் சதிவலையை அறுத்தெறிவோம்.. கொலை இல்லை; கொள்ளை இல்லை... மக்களின் மகிழ்ச்சிக்கோ அளவில்லை...அதை மீண்டும் அமைப்பதற்கு ; ஒய்வின்றி உழைப்பதற்கு; உறுதி ஏற்கிறோம்” என்று கூட்டாக உறுதிமொழி ஏற்றனர்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மரணம் அடைந்தார்.