Published : 05 Dec 2021 04:06 AM
Last Updated : 05 Dec 2021 04:06 AM

மக்களுக்கு சுய கட்டுப்பாடு அவசியம்; தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தும் சூழல் இல்லை: சுகாதாரத் துறை செயலர் தகவல்

தமிழகத்தில் ஊரடங்கை அமல்படுத்தும் சூழல் இல்லை. பொதுமக்கள் சுய கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் நேற்று 50 ஆயிரம் இடங்களில் 13-வதுமெகா கரோனா தடுப்பூசி முகாம்நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் நடந்த முகாமை சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஒமைக்ரான் கரோனா வைரஸ் குறித்து பதற்றம் தேவையில்லை. ஆனால், அதை தடுக்க 2 தவணைதடுப்பூசியை கட்டாயம் போடவேண்டும். தனி நபர் இடைவெளியைப் பின்பற்றி, கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் எனும் விழிப்புணர்வு அவசியம்.

கரோனாவில் டெல்டா வகைதான் உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒமைக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து இதுவரை 20 விமானங்கள், பாதிப்பு இல்லாத நாடுகளில்இருந்து 85 விமானங்கள் வந்துள்ளன. மொத்தம் 12,188 பேருக்குசோதனை செய்ததில் 3 பேருக்குகரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் 3 பேரும் நலமாக உள்ளனர். அவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருக்க வாய்ப்பு குறைவு என மருத்துவ ரீதியாக தெரியவந்துள்ளது.

ஒமைக்ரான் தொற்று உள்ளதா என சந்தேகம் உள்ளோரின் மாதிரிகளை தமிழகத்திலும் பரிசோதனை செய்கிறோம், மத்திய வைராலஜி ஆய்வு கூடத்துக்கும் அனுப்பி வருகிறோம்.

3-ம் அலை வந்தாலும், வராவிட்டாலும் தமிழகத்தில் மருத்துவக் கட்டமைப்பு வலுவாக உள்ளது. மக்கள் சுய கட்டுப்பாட்டை கடைபிடித்தால் ஊரடங்கு தேவையில்லை. தற்போது தமிழகத்தில் ஊரடங்கை அமல்படுத்தும் சூழல் இல்லை என்றாலும் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது பற்றிஉலக சுகாதார நிறுவனத்தின்அறிவுறுத்தல்களை பொருத்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிதாக 731 பேருக்கு கரோனா

தமிழகத்தில் நேற்று ஆண்கள்422, பெண்கள் 309 என 731 பேர்கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 136, கோவையில் 130 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 27 லட்சத்து 29,762 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 26 லட்சத்து 85,203 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று753 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 8,070 பேர் சிகிச்சையில்உள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் இளைஞர்கள், முதியவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத் துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x