

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் கடந்த சிலதினங்களுக்கு முன், டிராக்டருக்கான வங்கி கடன் பாக்கியை செலுத்தாத தஞ்சாவூர் மாவட்ட விவசாயி ஒருவர் போலீஸாரால் அடித்து இழுத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று பிற் பகல் தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து மனு அளித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
விவசாயியை அடித்து துன் புறுத்திய இன்ஸ்பெக்டர் உள் ளிட்ட 5 போலீஸார் மீது நட வடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட வங்கி யின் நடவடிக்கைகளை முடக்கு வதுடன், அந்த வங்கி அனுப்பிய குண்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளி்த்தேன். ஆனால், டிஜிபியிடம் கொடுக்குமாறு தேர்தல் அதிகாரி கூறினார். தற்போது அரசு நிர் வாகம் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் இருப்பதால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு வருவதாக கூறியவுடன், டிஜிபிக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி உறுதியளித்தார் என்று அவர் கூறினார்.
தனியார் நிதிநிறுவனம் மீது நடவடிக்கை கோரி தஞ்சை மாவட்டம் பாப்பாநாட்டில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். நாகப்பட்டி னம் புதிய பேருந்து நிலையம் அருகே காவிரி விவசாயி கள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.