

பட்டியலினத்தவர்கள் குறித்துநடிகை மீராமிதுன் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பலர் சார்பில்போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கேரளாவில் பதுங்கியிருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை நகல் வழங்குவதற்காக மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் வரும் டிச.17 அன்று நேரில் ஆஜராக வேண்டுமென சென்னை முதன்மை அமர்வு நீதிபதி ஆர்.செல்வக்குமார் சம்மன் பிறப்பி்த்து உத்தரவிட்டுள்ளார்.