Published : 15 Mar 2016 08:20 AM
Last Updated : 15 Mar 2016 08:20 AM

பொதுவாழ்வில் நேர்மையை காட்டிலும் மகத்தான சொத்து வேறொன்றும் இல்லை: ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கருத்து

நேர்மையை விட மகத்தான சொத்து வேறொன்றும் இல்லை என்று திருச்சியில் நடந்த பாராட்டு விழாவில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பேசினார்.

திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள சென்னை ரேஸ் இன்ஸ்டிடியூட்டில் பயின்று வங்கி மற்றும் எஸ்எஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. மேலாண்மை இயக்குநர் பரத் சீமான் தலைமை வகித்தார். முதல்வர் கண்ணன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:

மாணவர்கள் வெற்றி பெற்று சுயநலமின்றி பாடுபட வேண்டும். ஆழ்ந்து உன்னிப்பாக கவனிக்கக் கூடிய எவரும் வெற்றி பெறுவார்கள். மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் அறிவும் ஆற் றலும் இருக்கிறது. அரசுப் பள் ளிகள்தான் ஏழைப் பிள்ளை கள் கல்வி கற்கும் கடைசி நம்பிக் கையாகும். தமிழை வளர்ப்பவர்கள் அவர்கள் தான். இவர்கள் இல்லை என்றால் தமிழ் இல்லை.

மாணவர்கள் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் அறிவுபூர்வ மாக செயல்பட்டு வெற்றி பெற வேண்டும். தன்னம்பிக்கை கொண் டவர்களே வெற்றி பெறுகிறார்கள். வாய்ப்புகளுக்காக காத்திருக் காமல் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். எதிர்கால கவலையை தூக்கி எறிந்து அசாத்திய நம்பிக்கையோடு வாழ்க் கையை வாழுங்கள். கனவு காணுங்கள் லட்சியத்தோடும் குறிக்கோளோடும் இருங்கள்.

இளம் வயதில் மனதில் ஆழமாக எது பதிகிறதோ அதுவாகவே அவர்கள் உருவாகிறார்கள். மாண வர்களின் பேச்சும், சிந்தையும் ஆழ மாக இருக்க வேண்டும். மாணவர் கள் கிராம மேம்பாட்டுக்கு பங்க ளிப்பு செய்ய வேண்டும். விவசாயிக ளுக்கு உதவ வேண்டும்.

நேர்மையை விட மகத்தான சொத்து வேறொன்றும் இல்லை. மாணவர்கள் குடும்பத்துக்குள் குறுகிவிடாமல் சுயநலத்தால் சுருங்கிவிடாமல் தேசத்துக்காக வும், சமூகத்துக்காகவும் நிறைந்தி ருக்க வேண்டும். அப்போது நீங்கள் வரலாறாக மாறுவீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மதுரை கிளை முதல்வர் மதன்சீ மான், பயிற்சியாளர் கோபால், கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக முதன்மை பயிற்சி யாளர் வீரராகவன் வர வேற்றார். முடிவில் தலைமை பயிற்சியாளர் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x