சிதம்பரத்தில் வடையால் வளர்ந்த கடையில் வடை திருவிழா

 சிதம்பரம் சண்முகவிலாஸ் கடையில் வடை திருவிழாவையொட்டி பொதுமக்களுக்கு வடைகள் வழங்கப்பட்டது.
 சிதம்பரம் சண்முகவிலாஸ் கடையில் வடை திருவிழாவையொட்டி பொதுமக்களுக்கு வடைகள் வழங்கப்பட்டது.
Updated on
1 min read

சிதம்பரத்தில் வடையால் வளர்ந்த கடையில் 3ம் ஆண்டு வடை திருவிழா நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தெற்கு வீதியில் கடந்த 50-ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீனிவாச ஐயர் என்பவர் தெருவோரத்தில் தள்ளுவண்டியில் வடை சுட்டு வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது அவரது கடையில் விற்பனை செய்யப்படும் வடையை வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் காத்திருந்து வடையை வாங்கி சென்றுள்ளனர்.

அப்படி வடையை விற்று வளர்ந்த கடை இன்று சண்முகவிலாஸ் என்ற பெரிய சுவிட் கடையாக வளர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த 3 வருடத்திற்கு முன்பு இந்த கடையை நிறுவிய ஸ்ரீனிவாச ஐயர் உயிரிழந்தார். இதனையொடுத்து டிசம்பர் மாதம் முதல் சனிக்கிழமையில் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வடையால் வளர்த்த கடையின் நிறுவனர் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் வடை திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு இன்று (டிச.04) சனிக்கிழமை 3-வது ஆண்டு நினைவு நாளையொட்டி வடை திருவிழா கடையின் வாயிலில் நடைபெற்றது. இன்று ஒரு நாள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக ஒரு வடை ரூ7 மதிப்புள்ளதை இலவசமாக 10 ஆயிரம் வடைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஒருவர் எத்தனை வடை வேண்டுமனாலும் சாப்பிடாலும் கொடுத்துகொண்டே இருப்பார்கள். ஆனால் பார்சல் எடுத்துபோக அனுமதி இல்லை. இந்நிகழ்ச்சியில் கடையின் உரிமையாளர் கணேஷ் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வடைகளை வாரி வழங்கினார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in