Published : 27 Mar 2016 10:46 AM
Last Updated : 27 Mar 2016 10:46 AM

2ஜி ஊழலில் தொடர்பு என குற்றச்சாட்டு: வைகோவுக்கு மு.க.ஸ்டாலின் நோட்டீஸ்

2ஜி அலைக்கற்றை ஊழலில் தொடர்பு இருப்பதாக கூறிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வழக்கறிஞர் மூலம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக வழக்கறிஞர் நோட்டீஸில் கூறியிருப்பதாவது:

கடந்த 25-ம் தேதி மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ‘‘2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் பலனடைந்த திமுகவைச் சேர்ந்த பலரது விவரங் கள் இன்னும் வெளிவரவில்லை. ஷாகித் பால்வா தமிழகத்துக்கு வந்து திமுகவில் யாருக்கு எவ்வ ளவு பணம் கொடுத்தார் என்பதும், அவருக்கும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் உள்ள தொடர்புகள் குறித்தும் விசாரிக் கப்பட வேண்டும். பெரம்பலூர் சாதிக் பாட்சா தற்கொலை குறித் தும் விசாரிக்க வேண்டும். ஸ்டாலின் - ஷாகித் பால்வா தொடர்பை சொன்னதால்தான் மரணமடைய நேர்ந்ததா என்பது பற்றியும் விசா ரிக்க வேண்டும். மக்கள் மன்றத் தில் விவாதிக்கப்பட வேண்டும்’’ என பேசியிருக்கிறார். இது முன் னணி காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள இந்த நேரத்தில் இதுபோன்ற உண்மைக்கு மாறான, அவதூறான குற்றச்சாட்டுகளை கூறுவது திமுகவுக்கும், மு.க.ஸ்டா லினுக்கும் களங்கம் கற்பிக்கும் முயற்சியாகும். எனவே, ஸ்டாலின் குறித்து பேசிய தவறான செய்தி களுக்காக இன்று முதல் 3 நாட் களுக்குள் நீங்கள் (வைகோ) அவதூறாகப் பேசியதை வாபஸ் பெற வேண்டும். அத்துடன் வருத் தமும் தெரிவிக்க வேண்டும். இல் லையெனில் உங்கள் மீது சிவில் மற்றும் குற்றவியல் சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்படும்.

இவ்வாறு அந்தநோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x