தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.248 குறைவு

தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.248 குறைவு
Updated on
1 min read

டாலருக்கான இந்திய ரூபாய் மதிப்பு வலுவாக இருந்ததால் சென்னையில் நேற்று தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.248 குறைந்து ரூ.21 ஆயிரத்து 768-க்கு விற்கப்பட்டது.

சர்வதேச அளவில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங் களுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வலுவாக இருந்ததால், சென்னையில் நேற்று 22 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.248 குறைந்து ரூ.21,768க்கு விற்கப்பட்டது. 22 காரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2,721க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2,752க்கு விற்கப் பட்டது.

இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, “வழக்க மாக சர்வதேச அளவில் தங்கத் தின் விலையில் மாற்றம் இருக்கும் போது உள்ளூரிலும் மாற்றம் இருக் கும். ஆனால், நேற்றைய நிலவரப் படி தங்கத்தின் விலை சர்வதேச அளவில் சற்று உயர்ந்தபோதிலும் இந்திய ரூபாயின் மதிப்பு வலுவாக இருந்ததால் தங்கத்தின் விலை கணிசமாக குறைந்துள்ளது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in