அதிமுக உட்கட்சித் தேர்தல்: ஓபிஎஸ், ஈபிஎஸ் வேட்புமனு தாக்கல்

அதிமுக உட்கட்சித் தேர்தல்: ஓபிஎஸ், ஈபிஎஸ் வேட்புமனு தாக்கல்
Updated on
1 min read

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புக்கு ஓ. பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதுகுறித்து அதிமுக தலைமை சார்ப்பில் வெளியிட்ட அறிக்கையில், “ அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர்‌ தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்‌, சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம்‌ சாலையில்‌ உள்ள தலைமைக்‌ கழக புரட்சித்‌ தலைவா எம்‌.ஜி.ஆர்‌. மாளிகையில்‌ 3.12.2021 அன்று தொடங்கி, நடைபெற்று வருகிறது.

இன்று காலை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்‌ தலைவருமான பன்னீர்செல்வம்‌, இணை ஒருங்கிணைப்பாளரும்‌,சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி & பழனிசாமி இணைந்து கழக ஒருங்கிணைப்பாளர்‌, கழக இணை ஒருங்கிணைப்பாளர்‌ பொறுப்பிற்கு, தங்களது வேட்பு மனுவை தாக்கல்‌ செய்தனர்‌.

அதனையடுத்து, கழக ஒருங்கிணைப்பாளர்‌ பொறுப்பிற்கு ஒ. பன்னீர்செல்வம்‌ கழக இணை ஒருங்கிணைப்பாளர்‌ பொறுப்பிற்கு எடப்பாடிபழனிசாமி போட்டியிட வேண்டி, தலைமைக்‌ கழக நிர்வாகிகள்‌, மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்கள்‌, முன்னாள்‌ அமைச்சர்கள்‌ உள்ளிட்ட கழகத்தில்‌ பல்வேறு நிலைகளில்‌பணியாற்றி வரும்‌ நிர்வாகிகள்‌ தங்களுடைய விருப்ப மனுக்களை அளித்த வண்ணம்‌ உள்ளனர்‌” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in