டாஸ்மாக் மதுபானக் கடைகளை இரவு 10 மணி வரை திறக்க அனுமதி: வருமானம் சரிந்ததால் நிர்வாகம் நடவடிக்கை

டாஸ்மாக் மதுபானக் கடைகளை இரவு 10 மணி வரை திறக்க அனுமதி: வருமானம் சரிந்ததால் நிர்வாகம் நடவடிக்கை
Updated on
1 min read

டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை மீண்டும் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் எல்.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் இயங்கும் அரசு டாஸ்மாக் கடைகள் காலை 10 மணிமுதல் இரவு 8 மணி வரை இயங்கி வருகிறது. இந்நிலையில், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, டாஸ்மாக் கடைகள், பார்களை இனி பகல் 12 மணிமுதல் இரவு 10 மணி வரை எனவழக்கமான நேரத்தில் இயங்கஅனுமதி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் கடைகள் நேற்று (3-ம் தேதி) மதியம்12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கின.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

டாஸ்மாக் கடைகள் கடந்த2016 மே 25-ம் தேதியில் இருந்துமதியம் 12 மணி முதல் இரவு 10 மணிவரை இயங்கின. கரோனா பரவலை கருத்தில் கொண்டு, கடைகள் நேரம் குறைக்கப்பட்டது.

ரூ.7 ஆயிரம் கோடி இழப்பு

வழக்கமாக இரவு 8 முதல் 10 மணிக்குள்தான் அதிகம் விற்பனையாகும். ஆனால், தற்போது 8 மணிக்கே கடைகள் அடைக்கப்படுவதாலும், கடைகள் குறைக்கப்பட்டதாலும், செப்டம்பர் மாத புள்ளிவிவரத்தின்படி, அரசுக்கு சுமார் ரூ.7 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டுதான் இரவு 10 மணி வரை கடைகளை இயக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

இதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ‘‘இரவு 10 மணி வரை கடைகள்செயல்படும்போது, விற்பனை கணக்கு முடிக்க இரவு 11 மணிக்குமேல் ஆகும். இதனால், விற்பனைபணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரிக்கும். ஊழியர்கள் தாக்கப்படுவது அதிகரிக்கும்.எனவே, மதுக்கடைகள் இயங்கும் நேரத்தை காலை 10 மணி முதல்இரவு 8 மணி வரை என்றே மாற்றியமைக்க வேண்டும்’’ என்றுதமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில தலைவர் நா.பெரியசாமி, சிஐடியு சம்மேளன பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன் வலியுறுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in