சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் நடமாடும் வாக்காளர் சேவை மையம்: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் நடமாடும் வாக்காளர் சேவை மையம்: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
Updated on
1 min read

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடமாடும் வாக்காளர் சேவை மையம் தொடங்கப்பட்டிருப்பதால் வாக்காளர்கள் இதனைப் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர் களுக்கு நேற்று அவர் அளித்த பேட்டி:

தமிழ்நாட்டில் மொத்தம் 65 ஆயிரத்து 616 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்காளர் எண் ணிக்கைக்கு ஏற்ப மேலும் 700 வாக்குச்சாவடிகள் அதிகரிக்க வேண்டும் என்று கருத்துரு வரப்பெற்றுள்ளது. இத்தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளும் புகைபிடிக்க தடை செய்யப் பட்ட பகுதிகளாக அறிவிக்கப் படுகிறது.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு ஒரு வாகனம் வீதம் 16 நடமாடும் வாக்காளர் சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மக்கள் கூடும் இடங்களில் வலம் வரும் இந்த வாகனத்தில், கம்ப்யூட்டர் வசதியுடன் அலுவலர் ஒருவர் இருப்பார். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் போன்றவற்றுக்கு வாக்காளர்கள் இந்த மையத்தை பயன்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாவட்டங்களுக்கும் விரிவாக்கம்

இதற்கு கிடைக்கும் வரவேற் பைப் பொருத்து, பிற மாவட்டங் களில் உள்ள தொகுதிகளுக்கு இந்த நடைமுறை விரிவாக்கப்படும். தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு உரிய அனுமதி பெறப்பட்டிருக்கிறதா, இல்லையா என்பதை அறிந்துகொள்வதற்காக எஸ்.எம்.எஸ். வசதி செய்து தரப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பதற்ற மான வாக்குச்சாவடிகளைக் கண் காணிப்பதற்காக மத்திய அரசுப் பணியில் உள்ள அதிகாரிகள் 7 ஆயிரத்து 500 பேர் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட வுள்ளனர்.

தமிழ்நாட்டில் மொத்தம் 136 பதிவுபெற்ற கட்சிகள் இருக்கின்றன. இவற்றில் 15 கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டுவிட்டது. பாமகவுக்கு மாம்பழ சின்னம் தரப்பட்டுள்ளது. தேர்தல் ஆணை யம் வெளியிட்டுள்ள சின்னங் களில் தங்களுக்கு என்ன சின்னம் வேண்டும்? என்று கோரி தேர்தல் ஆணையத்திடம் கட்சிகள் விண் ணப்பிக்கலாம். அதுகுறித்து பரிசீலித்து தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கீடு செய்யும்.

துப்பாக்கிகள் ஒப்படைப்பு

100 சதவீதம் வாக்குப்பதிவை எட்டுவதற்காக பல்வேறு விழிப் புணர்வு பிரச்சாரங்கள் செய்யப் படுகின்றன. அந்த வரிசையில் ஜவுளிக்கடைகளில் மக்கள் துணி வாங்கிச் செல்லும் கைப்பைகளில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் அசம்பாவிதங்களைத் தடுக்க உரிமம் பெற்ற 18 ஆயிரத்து 788 துப்பாக்கிகள் அந்தந்த பகுதி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றார் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in