

அதிமுகவில் விருப்ப மனு அளித் தவர்களுக்கான நேர்காணல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
அதிமுகவில் 2-ம் கட்ட நேர்காணல் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. 10-ம் நாளான நேற்று காலை விருதுநகர் தொகு தியைச் சேர்ந்த 4 பேரும் சேலம், ஈரோடு மாவட்ட தொகுதி களுக்கு விருப்ப மனு அளித்தவர் களும் முதல்வர் ஜெயலலிதா இல்லத்துக்குச் சென்றனர். பிற் பகலில் நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் நேர்காண லில் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில் போட்டியிட விருப்ப மனு அளித்த வர்களும் நேற்று அழைக்கப் பட்டிருந்தனர். திருவண்ணா மலையைச் சேர்ந்த ஒருவர் கூறும் போது, ‘‘ஏற்கெனவே 2 நாட்க ளுக்கு முன்பு அழைக்கப்பட்ட வர்களுக்கு மட்டுமே தற்போது நேர்காணல் நடக்கிறது. எங்க ளுக்கு எப்போது அழைப்பு வரும் என தெரியவில்லை’’ என்றார்.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட் டங்களில் விடுபட்டவர்கள் மற்றும் புதுச்சேரி, திருவண்ணாமலை, விழுப்புரம்,கடலூர் மாவட்டங் களைச் சேர்ந்தவர்களுக்கு இன்று நேர்காணல் நடக்கும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த 10 நாட்களில் 28 மாவட்டங்களுக்கான நேர் காணல் முடிந்துள்ளது. சென்னை யில் உள்ள தொகுதிகளுக்கு முழுமையாக நேர்காணல் நடக்க வில்லை. இதுதவிர, தேனி மாவட்டத்தில் போடி, திருச்சியில் ரங்கம், திருவாரூரில் நன்னி லம் என குறிப்பிட்ட சில தொகுதி களுக்கு யாரும் அழைக்கப்பட வில்லை. இன்னும் ஓரிரு நாளில் நேர்காணல் நிறைவடைந்துவிடும் என கூறப்படுகிறது. ‘விடுபட்ட தொகுதிகளுக்கான வேட் பாளர்கள் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுவிட்டதால் அந்த தொகுதிகளுக்கு யாரையும் அழைக்கவில்லை. புதுச்சேரி, கேரள மாநிலங்களுக்கும் நேர் காணல் நடத்த வேண்டியுள்ளது.
எனவே, அடுத்த சில தினங்களில் நேர்காணல் முடியும். ஏப்ரல் 2-ம் வாரத்தில் அதாவது 11-ம் தேதி நல்ல நாள் என்பதால் அன்று வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது’ என அதிமுக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.