

அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான 3 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்தி காலியிடங்களை நிரப்புவது, சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் ஆசிரியர் பணி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலவரையற்ற அறவழி போராட்டத்தை தொடங்கினர். அனைத்து மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் இந்த போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது.