விரைவில் அதிமுக நிலை மாறும், தலை நிமிரும்: தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம் என சசிகலா திட்டவட்டம்

விரைவில் அதிமுக நிலை மாறும், தலை நிமிரும்: தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம் என சசிகலா திட்டவட்டம்
Updated on
1 min read

அதிமுக தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம். விரைவில் நிலை மாறும், தலை நிமிரும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயரில் சசிகலா நேற்று வெளியிட்ட அறிக்கை:

அதிமுக என்றைக்குமே எளிய தொண்டர்களுக்கான இயக்கமாக செயல்பட்டு, நாட்டின் 3-வது பெரியகட்சி என்ற நிலைக்கு சென்றது. ஆனால், இன்றைய நிலையை பார்க்கும்போது, இதற்காகவா நம்இருபெரும் தலைவர்களும் ரத்தத்தை வியர்வையாக்கி ஓயாதுஉழைத்து கட்சியை காப்பாற்றினர்? இதை நினைக்கும்போது, தொண்டனின் நெஞ்சம் குமுறுகிறது.

என்றைக்கு தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு இயக்கம் பயன்பட்டதோ, அன்று முதல் அதன்மதிப்பு குறைந்தது. தொண்டர்களையும் மறந்தது.

தொண்டர்கள் சோர்ந்து போகாமல் தைரியமாக இருங்கள். ஒரு சிலருடைய தேவைகளுக்காகவும், விருப்பு, வெறுப்புகளுக்காகவும் செயல்பட்டுக் கொண்டு இருக்கும்நம் இயக்கத்தை, சரிசெய்து, மீண்டும் தொண்டர்களுக்கான இயக்கமாக விரைவில் மாற்றிக் காட்டுவோம். அனைத்து அடிமட்டத் தொண்டர்களும் சந்தோஷமாக, கவலையின்றி இருங்கள். கவலைப்படாமல் சிறிது காலம் பொறுத்திருங்கள். விரைவில் அதிமுக நிலை மாறும், தலை நிமிரும். எத்தனை இடர்ப்பாடுகள், சோதனைகள் ஏற்பட்டாலும் தகர்த்தெறிந்து என் உயிர்மூச்சு உள்ளவரை நம் இயக்கத்தை காத்து, தொண்டர்களின் இயக்கமாக மாற்றும் வரைஉழைத்துக் கொண்டே இருப்பேன். ஓய்ந்துவிட மாட்டேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in