

மதுரை மேலஅனுப்பானடியில் நேற்று திடீரென்று நடுரோட்டில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
மாநகராட்சி முதன்மை பொறியாளர் அரசு தலைமையில் பொறியாளர்கள் கிருஷ்ணா, அலெக்ஸாண்டர் பள்ளத்தை பார்வையிட்டனர். அதைத்தொடர்ந்து பள்ளத்தை சீரமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதே பள்ளத்துக்கு அருகருகே இதற்கு முன்னர் இரண்டு முறை பெரிய பள்ளங்கள் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘தொடர் மழை மற்றும் மண் ஈரத்தன்மை யினால் பள்ளம் ஏற்பட்டுள்ளது,’’ என்றனர்.
மழை பெய்து வரும் நிலையில் போதிய பராமரிப்பு இல்லாத சாலைகளில் இதுபோன்ற பள்ளங்கள் ஏற்பட்டு வருகின்றன. மழைநீர் தேங்கும்போது பள்ளம் இருப்பது தெரியாமல் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.