Published : 02 Dec 2021 04:38 PM
Last Updated : 02 Dec 2021 04:38 PM

விமான நிலைய தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து: காயமின்றி தப்பிய சுகாதாரத்துறைச் செயலாளர்

சுகாதாரத்துறை செயலாலர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் மதுரை விமான நிலைய தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ராதாகிருஷ்ணன் காயமின்றி உயிர் தப்பினார்.

மதுரை விமான நிலையத்தில் ஒமைக்ரான் கரோனா வைரஸ் பரிசோதனை மையம் ஆய்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்துவிட்டு காரில் ஏறி திருச்சிக்கு அவசரம் அவசரமாக புறப்பட்டார்.

அப்போது கார் புறப்பட்டு விமானநிலையம் பகுதியில் சென்றுகொண்டிருக்கும் போது கார் எதிர்பாராத விதமாக அங்கிருந்து தடுப்பு சுவரில் இடித்து விபத்து ஏற்பட்டது. காரின் முன்பகுதி சேதமடைந்த நிலையில் கார் சுவரில் மோதி நின்றது. அதிர்ச்சியடைந்த போலீஸார், அவருடன் சென்ற மற்ற கார்களில் வந்தவர்கள் இறங்கி ஓடிச் சென்று பார்த்தனர்.

அதிர்ஷ்டவசமாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு காயம் ஏற்படவில்லை. அவர் உடனடியாக காரை விட்டு இறங்கி ஓட்டுனருக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா? என விசாரித்தார். காரை விபத்து ஏற்படுத்தியதற்கு ஓட்டுனர், மன்னித்துவிடுங்கள் என்று சுகாதாரத்துறை செயலரிடம் வருத்தம் தெரிவித்தார்.

அதற்கு அவர் பராவாயில்லை கவலைப்படாதிங்க, உங்களுக்கு எதுவும் அடிப்படலல்ல என்று நலம் விசாரித்துவிட்டு. காவல்துறையினரை அழைத்து ஓட்டுனருக்கு உதவு சென்னதுடன், வேறு காரில் செல்கிறேன் பதட்டபடாமல் இருங்கள் என ஓட்டுனருக்கு ஆறுதல் கூறிச் சென்றார்.

இதனையடுத்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாற்று வாகனத்தில் திருச்சிக்கு கரோனா ஆய்வு பணிக்காக சாலை மார்க்கமாக புறப்பட்டு சென்றார்.

தான் பயணித்த கார் விபத்து ஏற்பட்ட நிலையிலும் தான் வந்த காரை ஓட்டி வந்த ஓட்டுனர் மீதான அக்கறையை பார்த்த அங்கு கூடியிருந்தவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x