Published : 02 Dec 2021 03:14 PM
Last Updated : 02 Dec 2021 03:14 PM

தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில், ”தென்‌ மாவட்டங்கள்‌, மேற்கு தொடர்ச்சு மலையை ஓட்டிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ ஒரிரு இடங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

மதுரை, விருதுநகர்‌, திருநெல்வேலி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ உள்‌ மாவட்டங்களில்‌ அனேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, வட கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்குற்கு. வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x