தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவுக்கு பெற்றோரிடம் உறுதிமொழி: கல்வி துறை நூதன விழிப்புணர்வு

தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவுக்கு பெற்றோரிடம் உறுதிமொழி: கல்வி துறை நூதன விழிப்புணர்வு
Updated on
1 min read

தேர்தலில் பொதுமக்கள் நூறு சதவீதம் வாக்களிக்கும் வகையில் அரசு பள்ளி மாணவர்கள் மூலம் அவர்களது பெற்றோரிடம் வாக்காளர் உறுதிமொழியை பெறுகிறது கல்வித் துறை.

வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர் களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், சட்டப் பேரவைத் தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை எட்டும் வகையிலும் விளக்கக் கூட்டங்கள் நடத்துவது, குறும்படங்கள் திரையிடுதல், விழிப்புணர்வுப் பேரணி, துண்டுப்பிரசுரம் வழங்குதல், கையெழுத்து இயக்கம் நடத்துதல், உறுதிமொழி எடுத்தல் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவ, மாணவி கள் தங்கள் பெற்றோரிடம் வாக்களிப்பதன் அவசி யத்தை விளக்கும் வகையில் வாக்காளர் உறுதி மொழிப் படிவத்தை வழங்கி வருகிறது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜனநாயகத்தின் மீது இணங்கி நடக்கும் நம்பிக் கையுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திர மான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல் களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம். ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்று உறுதி மொழிகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோரிடம் படித்துக் காண்பித்து கையொப்பம் பெற்று, அப் படிவத்தை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் மாணவ, மாணவி யர்களுக்கு இப்படிவம் வழங்கப்பட்டு பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

விருதுநகர் அண்ணாமலை மகளிர் நடுநிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இப்படிவத்தை மாணவிகளிடம் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான வே.ராஜாராமன் வழங்கினார். அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.புகழேந்தி உடனிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in