Published : 02 Dec 2021 03:07 AM
Last Updated : 02 Dec 2021 03:07 AM

வில்லியனூர் அருகே முன்விரோத தகராறில் இளைஞரை தாக்கி வெடிகுண்டு வீசிய வழக்கில் 6 சிறுவர்கள் கைது

வில்லியனூர் அருகே முன்விரோ தத்தில் இளைஞரை தாக்கி வெடிகுண்டு வீசிய வழக்கில் 6 சிறுவர்களை போலீஸார் கைது செய்தனர்.

புதுச்சேரி அரும்பார்த்தபுரம் புதுத் தெருவைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (60), கட்டிடத் தொழிலாளி.இவரது மனைவி ருக்மணி, மகன் கள் மகேஷ் (29), மகேந்திரன் (26 பிளம்பர்). இவரது உறவினர் ஒருவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் பைக்கில் சென்றபோது அங்கு காரில் வந்த மற்றொருவர் மீது மோதியதாக தெரிகிறது. இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தனது உறவி னருக்கு ஆதரவாக மகேந்திரன் சென்றுள்ளார். வில்லியனூர் அருகே உள்ள மணவெளி பகுதி யைச் சேர்ந்த சிவா (60) என்பவர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்துள்ளார். அப்போது மகேந் திரன் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து சிவாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அங்கு வைத்து இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டனர். இருப்பினும் சிவா, அவரது 17 வயது மகன் தரப்பினர் ஆத்திரத்தில் இருந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ருக்மணி, மகேஷ் ஆகியோர் வீட்டில் இருந்தபோது பைக்கில் வந்த 3 பேர் மகேஷிடம், மகேந்திரனை கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் மகேஷ் தாக்கப்பட்டார். மேலும் பைக்கில் வந்தவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை மகேஷ் வீட்டின் முன்பு வீசினர். இதில் அந்த குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதைப் பார்த்ததும் மகேஷ் வீட்டுக்குள் ஓடினார். இதற்கிடையில் குண்டு களை வீசிய நபர்கள் அங்கிருந்து பைக்கில் தப்பிச் சென்றுவிட்டனர்.

தகவலறிந்த வில்லியனூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் சம்பவஇடத்துக்கு சென்று பார்வையிட் டனர்.

வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு சிதறி கிடந்த வெடிமருந்து உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து வில்லியனூர் போலீ ஸார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தினர்.

அதில், பிளம்பரான மகேந்திரன் வீட்டில் 17 வயது சிறுவர்கள் 2 பேர், 16 வயது சிறுவர்கள் 4 பேர்என 6 சிறுவர்கள் வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது. அவர்களை போலீஸார் தேடிவந்த நிலையில் நேற்று அவர்களை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், சிறுவர்களே வெடி குண்டை தயாரித்துள்ளனர். முதல்முறையாக தயாரித்ததால் சரிவரசெய்யத் தெரியவில்லை. இத னால் கூண்டு பட்டாசு போன்று அதனை செய்து எடுத்து வந்து வீசியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று அவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் அரியாங்குப்பத்தில் உள்ள சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் அடைத் தனர்.

முன்விரோத தகராறில் மிரட்டு வதற்காக வீடு மீது வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தில் சிறுவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக் கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x