

சிவகங்கை அருகே மல்லல் ஊராட்சி பில்லத்தி கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி அம்மாக்கண்ணு (70). இவரது கணவர் இறந்து விட்டார். அம்மாக்கண்ணு தனியாக ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். தொடர் மழையால் 10 நாட்களுக்கு முன்பு இவரது வீடு இடிந்தது. வீட்டுக்கு முன் இருந்த கழிப்பறை மட்டும் தப்பியது.
தங்குவதற்கு வேறு இடம் இல்லாததால் மூதாட்டி கழிப் பறையில் தனது பொருட்களை வைத்ததோடு, அங்கேயே சமையல் செய்து வசித்து வரு கிறார். இரவில் அருகேயுள்ள கண்மாய்க் கரை கூடாரத்தில் தூங்குகிறார்.
இதுகுறித்து அம்மாக்கண்ணு கூறுகையில், தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறை கட்டி பல மாதங்களாகியும் அதற்குரிய மானியத்தொகை ரூ.12 ஆயிரத்தை வழங்கவில்லை. முதியோர் உதவித்தொகை பெற பலமுறை விண்ணப்பித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலை யில் குடியிருந்த வீடும் இடிந்து விட்டது. எனக்கு உதவிபுரிய யாரும் இல்லாததால் கழிப்பறை யையே சமையல் அறையாக உபயோகிக்கிறேன் என்றார்.