தமிழகத்தில் எய்ட்ஸ் தாக்கம் 0.18 சதவீதமாக குறைந்தது: மா. சுப்பிரமணியன் பேச்சு
தமிழகத்தில் 1.13 சதவீதமாக இருந்த எய்ட்ஸ் தாக்கம் தற்போது 0.18 சதவீதமாக குறைந்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் நடந்த உலக எய்ட்ஸ் தின நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
“ தமிழக முதல்வா் வழிகாட்டுதலின்படி, மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் மூலம் செயல்படுத்தப்படும் எச்.ஐ.வி /எயட்ஸ் பற்றிய விழிப்புணர்வு திட்டங்கள் கடைநிலை மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றது. மேலும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றுள்ளோரை புறக்கணிக்காமல் அரவணைத்துச் செல்லும் நோக்கத்திலும் பல நல திட்டங்கள் தமிழக அரசின் மூலம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 1.13 சதவீதமாக இருந்த எய்ட்ஸ் தாக்கம் தற்போது 0.18 சதவீதமாக குறைந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை 1988 முதல் டிசம்பர் மாதம் முதல் தேதியை உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்க வேண்டுமென்று முடிவெடுத்து உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள் முதல் நாள் உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் உலக எய்ட்ஸ் தின மையக் கருத்து எச்.ஐ.வி / எயட்ஸுடன்
வாழும் மக்களுக்கு ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்குக் கொண்டு வருவோம்.
இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தின பொன்விழாவினை முன்னிட்டு - 9 மற்றும் 11 வகுப்பு பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணாவை
ஏற்படுத்தும் வகையில் “புதிய இந்தியா ௭0 75” என்ற தலைப்பில் ஓவியம், இணையதள வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் எச்.ஐ.வி. தொற்றை கண்டறிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் வட்டார சுகாதார மையங்களில் 2953
நம்பிக்கை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு எச்.ஐ.வி. இலவச பரிசோதனைகள் செய்யப்பட்டு,எயட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவாகளுக்கு இலவசமாக மருந்து வழங்கிட 55 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள் 174 இணை கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள் இயங்கி வருகின்றன.
தாயிடமிருந்து குழந்தைகளைக்கு எய்ட்ஸ் தொற்று பரவுதலை தடுக்கும் பொருட்டு - தேசிய சுகாதார திட்டத்தின் (1/1) கீழ் இனப்பெருக்கம் மற்றும் குழந்தை நலத்திட்டத்துடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
எய்ட்ஸ் தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளவார்கள் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கை மற்றும் சிகிச்சை அளிக்க “85 இலக்கு பணிகளுக்கான திட்டங்கள்” செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பெண் பாலியல் தொழிலாளர்கள், ஒரினச்சேோக்கையாளர்கள், போதை ஊசி பயன்படுத்துவோர், தொலைதூர லாரி ஒட்டுநர்கள் என பல்வேறு வகையில் கண்டறிந்து விழிப்புணாவு மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எயட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் புறக்கணிக்கப்படக்கூடாது என்ற உயரிய நோக்கில் தமிழக அரசு இக்குழந்தைகளுக்கு உதவி செய்யும் வகையில் - 25
கோடி வைப்பு நிதியுடன் தமிழ்நாடு அரசின் அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டு, நிதியிலிருந்து பெறப்படும் வட்டித்தொகையைக் கொண்டு, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு - மருந்து, ஊட்டச்சத்து, கல்வித்தொகை வழங்கப்படுகிறது, மேலும் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டோருக்கு, இலவச பஸ் பாஸ், விதவைகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது’’ என்று தெரிவித்தார்.
இந்நிகிழ்ச்சியில் எழும்பூர் சட்டப்பேரவை உறுப்பினா் இ.பரந்தாமன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மைச் செயலாளர் மரு.இராதாகிருஷ்ணன்,
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க இயக்குநர் ஹரிஹரன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மரு.எஸ்.குருநாதன் மற்றும் உயர்
அலுவலா்கள் கலந்து கொண்டனர்.
