பிலிம் நியூஸ் ஆனந்தன் மறைவு: முதல்வர், தலைவர்கள் இரங்கல்

பிலிம் நியூஸ் ஆனந்தன் மறைவு: முதல்வர், தலைவர்கள் இரங்கல்
Updated on
1 min read

முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

தமிழ்த் திரை உலகின் வரலாற்று ஆசிரியர் என்றும், நடமாடும் நூலகம் என்றும் பெருமை பெற்ற “பிலிம் நியூஸ்” ஆனந்தன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். சினிமா உலகில் நீண்டகால அனுபவம் உள்ள “பிலிம் நியூஸ்” ஆனந் தன் சினிமா தொடர்பான அனைத்து விவரங்களையும், புகைப்படங்களையும் தொகுத்து உள்ளார்.

தென்னிந்திய திரைப்பட வர்த் தக சபையின் செய்தியாளராக பணியாற்றியபோது, தமிழ் சினிமா குறித்த விவரங்களை சேகரிக்க ஆரம்பித்து, அதையே உணர்வுப்பூர்வ பணியாக மேற்கொண்டார். எவரிடமும் இல்லாத வகையில் அனைத்து விவரங்களையும் இவர் தொகுத்து வைத்திருக்கிறார்.

இதன் காரணமாகவே, கலா பீடம், கலைச்செல்வம், கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 2002-ம் ஆண்டு எனது தலைமையிலான அரசு, “பிலிம் நியூஸ்” ஆனந்தன் சேகரித்து வைத்திருந்த விவரங்கள், புத்தகங்கள், புகைப்படங்கள் போன்ற சேகரிப்புகளை அரசு வாங்கி பாதுகாத்திட ரூ.10 லட்சம் வழங்கியது. மேலும், அவர் எழுதிய “சாதனை படைத்த தமிழ் திரைப்பட வரலாறு” எனும் நூலை வெளியிடுவதற்கு நிதியுதவி வழங்கியது. அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக் கும், திரை உலகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி இரங்கல்

பிலிம் நியூஸ் ஆனந்தன் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட இரங்கல் செய்தி:-

கலைமாமணி பிலிம் நியூஸ் ஆனந்தன் மறைந்துவிட்டார் என்ற செய்தியை அறிந்து வருந்து கிறேன். தமிழக திரையுலகில் மக்கள் தொடர்பாளராக தன் வாழ்க்கையைத் தொடங்கி, திரைப்படத் துறை குறித்த பல்வேறு தகவல்களைச் சேகரித்து வைத்திருந்ததோடு, அந்த விவரங்களைத் தேவை யானவர்களுக்கு வழங்கியும் வந்தார். ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும், அந்த ஆண்டு என்னென்ன திரைப்படங்கள், எந்தெந்த நிறுவனத்தினரால் தயாரிக்கப்பட்டு வெளியிடப் பட்டன என்பன போன்ற விவரங் களையெல்லாம் தொகுத்து சிறு கையேடாகவும் வெளியிட்டு வந்தார்.

தமிழ்த் திரைப்படங்களின் ஆவணக் காப்பகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என் பது அவருடைய விருப்பமாக இருந்து திமுக ஆட்சியில் கவிஞர் இளையபாரதி தலைமை யில் ஆவணக் காப்பகம் ஒன்றும் அரசின் உதவியோடு தொடங்கப்பட்டது. இவருடைய மகன் டைமண்ட் பாபுவும் தந்தை வழியில் திரையுலகில் மக்கள் தொடர்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். பிலிம் நியூஸ் ஆனந்தன் மறைவால் வருந்தும் அவருடைய குடும் பத்தினருக்கும், நண்பர்களுக் கும், திரையுலகைச் சேர்ந்தவர் களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்டாலின் நேரில் அஞ்சலி

திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின் நேரில் அஞ்சலி செலுத்தினார். திக தலைவர் வீரமணி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், திரையுலக பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in