

புதுச்சேரி நெல்லித்தோப்பு அண்ணா நகர் 6-வது குறுக் குத் தெருவில் மசாஜ் சென்டர்இயங்குவதாகவும், அங்கு ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர் களை வரவழைத்து பாலியல் தொழில் நடப்பதாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து சிறப்பு அதிரடிப்படை மற்றும் உருளையன்பேட்டை போலீஸார் நேற்று முன்தினம் மாலை அங்கு சோதனை நடத்தி னர். அப்போது அங்கிருந்த 4 பெண்களை மீட்ட போலீஸார், மசாஜ் சென்டர் உரிமையாளர்கள் 2 பேர் மற்றும் அங்கிருந்த 3 வாடிக்கையாளர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதில், மசாஜ் சென்டர் உரிமையாளர்கள் புதுச்சேரி சாரம் பாலாஜிநகரைச் சேர்ந்த மகி (31), அவரது மனைவி விஜயலட்சுமி (31) என்பது தெரியவந்தது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சோலையூரை பூர்வீகமாக கொண்ட மகி, புதுச்சேரி அண்ணாநகரில் வாடகைக்கு வீடு எடுத்துகுடும்பத்துடன் தங்கி மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலை நடத்தியது தெரியவந் தது. மேலும், அங்கு வாடிக்கையா ளர்களாக வந்தவர்கள் கேரள மாநிலம் திரு கோட்டயம் பகுதியைச் சேர்ந்த ஜான்சன் ஜோசப் (28), கோட்டயம் நதிர்ஷா (26), கேரள இடுக்கி பகுதியைச் சேர்ந்த அஸ்வின் அந்தோணி (25) என்பது தெரியவந்தது.
இதையடுத்து மசாஜ் சென்டர் உரிமையாளர்களான தம்பதி மற்றும் கேரளாவைச் சேர்ந்த 3 பேர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மீட்கப்பட்ட 4 பெண்களும் காப்பகத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.