Published : 30 Mar 2016 08:17 AM
Last Updated : 30 Mar 2016 08:17 AM

திமுக கூட்டணியில் 3 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு: உதயசூரியன் சின்னத்தில் போட்டி

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ் லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி (மமக), எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.

இதில் முஸ்லிம் லீக், மமகவுக்கு தலா 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ், எஸ்டிபிஐ கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக முதல் சுற்று பேச்சு முடிந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து பெருந் தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர். தனபாலன், தமிழ்நாடு விவசாயிகள், தொழி லாளர்கள் கட்சியின் தலைவர் பொன்.குமார் ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதி, பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் ஆகி யோரை நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது தொகுதி பங்கீடு தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டது.

இது தொடர்பாக திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்தியில், ‘‘இரு கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்குவது என முடிவு எடுக்கப் பட்டது. இந்த தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னத் தில் போட்டியிடுவார்கள். மற்ற கூட்டணி கட்சிகளுடன் பேசிய பிறகு இந்தக் கட்சிகளுக்கான தொகுதிகள் அறிவிக்கப்படும்’’ என கூறப்பட்டுள்ளது.

கடந்த 2011 பேரவைத் தேர்தலில் என்.ஆர்.தனபாலன் சென்னை பெரம்பூர் தொகுதியிலும், பொன். குமார் உத்தரமேரூர் தொகுதியி லும் போட்டியிட்டு தோல்வி அடைந் தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத் தில் சமூக சமத்துவ படை கட்சித் தலைவரான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ப.சிவகாமி நேற்று மாலை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து சிவகாமியின் கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘சமூக சமத்துவப் படை கட்சி ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும். எந்த தொகுதி என்பது கூட்டணி கட்சிகளுடன் பேசிய பிறகு முடிவு செய்யப்படும்’ என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x