

திருவொற்றியூரில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனை யில் ரூ.57 லட்சத்துக்கான காசோலைகள் பறிமுதல் செய்யப் பட்டது.
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று காலை திருவொற்றியூர் சுங்கச்சாவடி அருகே வருவாய்த் துறை அதிகாரி பச்சையப்பன், காவல் உதவி ஆய்வாளர் ரங்க நாதன் மற்றும் போலீஸார் வாகன சோதனை நடத்தினர். அப்போது திருவொற்றியூரைச் சேர்ந்த யுவராஜ் என்பவரின் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அவர் வைத்திருந்த சூட்கேஸில் ரூ.5 லட்சம் பணம், ரூ.57 லட்சத்துக்கான 6 காசோலைகள் இருந்தன. ‘‘நான் வேலை செய்யும் நிறுவன உரிமையாளர் பெட்ரோல் பங்க் வைத்துள்ளார். அங்கு வசூலான பணத்தையும், காசோலைகளையும் வங்கியில் போடுவதற்காக கொண்டு செல்கி றேன்’’ என்று யுவராஜ் கூறியிருக் கிறார். ஆனால் பணம், காசோ லைகள் வைத்திருப்பதற்கான முறையான ஆவணங்கள் எதுவும் யுவராஜிடம் இல்லை. எனவே, அதிகாரிகள் பணம் மற்றும் காசோலைகளை பறிமுதல் செய்தனர்.