Published : 30 Nov 2021 03:08 AM
Last Updated : 30 Nov 2021 03:08 AM

50 ஆண்டுக்கு பின் நிரம்பிய மாடக்குளம் கண்மாய்: விழா எடுத்து கொண்டாடிய கிராம மக்கள்

50 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மாடக்குளம் கண்மாய் நேற்று நிரம்பியது.

மாடக்குளம் கண்மாய் 167 மில்லியன் கன அடி தண்ணீர் கொள்ளளவு கொண்டது. கண் மாய் கரையின் நீளம் 3,400 மீட்டர். இக்கண்மாயை நம்பி 2,500 ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன. 3 மதகுகள் உள்ளன.

மதுரையில் அடை மழை பெய்த காலத்திலும் கூட இக்கண்மாய் நிரம்பாமல் இருந்தது. தற்போது மதுரையில் வழக்கத்துக்கு மாறாக அதிக மழை பெய்து வருவதால் மாடக்குளம் கண்மாய்க்கு நீர் வரத்து அதிகரித்தது.

அதனால், 50 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தக் கண்மாய் நேற்று முழுக் கொள்ளளவை எட்டியது. உபரி நீர் கண்மாயில் இருந்து திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த சுற்றுவட்டார கிராம மக்கள் அரு கில் உள்ள அய்யனார் கோயிலில் விசேஷ பூஜைகளை செய்தனர். பின்னர் மூங்கிலால் ஆன 2 பந்தல்கால்களை தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் இருக்கக் கூடிய நடு கல்லின் மேல் கட்டி னர். பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த விழாவில் மேளதாளத்துடன் கண்மாய் நிரம் பியதை கொண்டாடினர்.

இதுகுறித்து மாடக்குளம் நாட் டாமை என்.முத்துகுமார் கூறிய தாவது:

50 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் முன்னோர் இது போன்று விழா எடுத்தனர்.

அதன்பிறகு தற்போதுதான் கண்மாய் நிரம்பியது. கண்மாய் நிரம்பியதால் மாடக்குளம் பொன்மேனி, பழங்காநத்தம், தானத்தவம் முதல் மதுரை பெரி யார் பஸ் நிலையம் வரை தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது.

கண்மாயின் வடக்கு பகுதியில் 70 ஏக்கர் ஆக்கிரமிப்பில் உள்ளது. அவற்றை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், கண்மாயை ஆழப்படுத்தி கூடுதலாக தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றார்.

பொதுப்பணித்துறை அதிகாரி கள் கூறுகையில், ‘‘இந்த கண்மாய் பொதுப்பணித்துறையின் கட்டுப் பாட்டில் இருக்கிறது. வைகை அணை உபரி நீர் பிரதான கால்வாய் மூலமாக மாடக்குளம் கண்மாய்க்கு வருகிறது. மாடக் குளம் கண்மாயின் நடு மடைப் பகுதியில் அமைந்துள்ள குத்துக்கல் முழுவதுமாக மூழ்கினால் மட்டுமே கண்மாய் முழு கொள்ளளவை எட்டியதாக கருதப்படும். தற் போது 50 ஆண்டுகளுக்கு பிறகு குத்துக்கல் மூழ்கியது. கண் மாய்க்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது,’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x