

பபாசி சங்கத் தலைவராக எஸ்.வைரவன் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
பபாசி என்று அழைக்கப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை (26.11.2021) அன்று வடபழனி கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. பபாசி சங்கத் தேர்தலில் வெற்றிபெற்ற நிர்வாகிகள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்தத் தேர்தலில் குமரன் பதிப்பகம் எஸ்.வைரவன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாதம் கீதம் பதிப்பகம் எஸ்.கே.முருகன் மீண்டும் செயலாளராகவும், லியோ புக்ஸ் ஏ.குமரன் பொருளாளராகவும், வனிதா பதிப்பகம் பெ.மயிலவேலன் துணைத் தலைவராகவும் (தமிழ்), மதுரை, சர்வோதய இலக்கியப் பண்ணை வி.புருஷோத்தமன் துணைத் தலைவராகவும் (ஆங்கிலம்), உணவு உலகம் பப்ளிகேஷன்ஸ் இராம மெய்யப்பன் துணை இணைச் செயலாளராகவும் (தமிழ்), ஸ்பைடர் புக்ஸ் எஸ்.சுப்பிரமணியன் துணை இணைச் செயலாளராகவும் (ஆங்கிலம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நிர்வாகக்குழு (தமிழ்) உறுப்பினர்களாக நக்கீரன் ஆர்.தனுஷ், ஐஎஃப்டி ஐ.ஜலாலுதீன், புலம் லோகநாதன், தமிழ்ச் சோலை பதிப்பகம் எஸ்.பிரபாகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நிர்வாகக் குழு (ஆங்கிலம்) உறுப்பினர்களாக மயூரா புக்ஸ் ஏ.கேளியப்பன், ஸ்பைடர் புக்ஸ் ஐ.முபாரக், டெக்னோ புக்ஸ் நந்த் கிஷோர், ஜெய்கோ கே.ஸ்ரீராம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நிரந்தரப் புத்தகக் காட்சி உறுப்பினர்களாக ஜே.ஹரிபிரசாத், ஏ.எஸ்.மகேந்திரன், எஸ்.ராம்குமார், ஆர்.சங்கர் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இவர்களது பொறுப்புக் காலம் 2021ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை ஆகும்.