மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவாரூர், மயிலாடுதுறையில் பாரம்பரிய நாட்டியாஞ்சலி விழா தொடக்கம்: பிரபல நடனக் கலைஞர்கள் பங்கேற்பு

மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவாரூர், மயிலாடுதுறையில் பாரம்பரிய நாட்டியாஞ்சலி விழா தொடக்கம்: பிரபல நடனக் கலைஞர்கள் பங்கேற்பு
Updated on
1 min read

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள நாட் டிய மேடையில், நாட்டியாஞ்சலி விழாக் குழு சார்பில் 19-ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. மெலட்டூர் எஸ்.நடராஜன் விழாவைத் தொடங்கிவைத்தார்.

சென்னை ஸ்ரீதேவி செந்தில், ஊர்மிளா சத்தியநாராயணா, மானசா, கொல்கத்தா முகுல் முகர்ஜி, சென்னை சித்ரா மற்றும் திருவாரூர் ஆரூரான் குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சிகள் நடை பெற்றன. பிரமுகர்கள் முரா.ரெ.நந்தகோபால், முரா.ரெ.குரு மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்ற னர். வரும் 10-ம் தேதி வரை பல்வேறு குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

சப்த ஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மதிவாணன், விழாவைத் தொடங்கிவைத்தார்.

சென்னை புஷ்பாஞ்சலி நாட்டியப் பள்ளி, கோவை ஜலதீபா சசிகுமார், வாலாஜா லாஸ்யா ஆர்ட்ஸ் அகாடமி உள்ளிட்ட பல்வேறு குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மூத்த நடனக் கலைஞர் ஸ்ரீமதிராதாவுக்கு ‘மயூர நிருத்ய சாகரம்’ விருது வழங்கப்பட்டது. இதில், அறக்கட்டளைத் தலைவர் பரணிதரன், செயலாளர் விஸ்வ நாதன், இணைச் செயலாளர் அகஸ்டின் விஜய், பிரமுகர்கள் ஏ.ஆர்.சி.அசோக்குமார், சொர்ண மால்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கும்பகோணம் ஆதிகும் பேஸ்வரர் கோயிலில் 15-ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா இன்று (மார்ச் 6) தொடங்குகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர். நாளை மாலை முதல் பரதம், மோகினியாட்டம், கதக் உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகள் இரவு 12 மணி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளன.

பிரபல நாட்டியக் கலைஞர்கள் ஷோபனா, ருக்மணி விஜயகுமார், சொர்ணமால்யா மற்றும் வெளி நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை நாட்டியாஞ்சலி விழாக் குழுவினர் செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in