கனமழை பொழிவால் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நவ.29, 30 தேதிகளில் விடுமுறை

புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
Updated on
1 min read

கனமழை பொழிவால் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் (29,30ம் தேதிகள்) விடுமுறை விடப்பட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக 2020 மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. பொதுத்தேர்வுகளும் நடைபெறாமல் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை புதுவையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

1 முதல் 8ம் வகுப்பு வரை நவம்பர் 8ம்தேதி முதல் அரைநாள் சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கனமழையால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.

தற்போது வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதால் ரெட் அவார்ட் தரப்பட்டுள்ளது ‌இதனால் புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது.

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஏரி, குளம் நிரம்பியுள்ளது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. புதுச்சேரியில் கனமழை பொழிகிறது.

இந்நிலையில் கல்வியமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், "தொடர் மழையால் நாளையும், நாளை மறுநாளும் (29,30ம் தேதிகளுக்கு) பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

மழையின் தன்மை பொருத்து 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்று கல்வி துறை அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in