

சென்னை துறைமுகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகள் மற்றும் வெளிநாட்டில் இருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப் படும் சரக்குகள் கன்டெய்னர் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. இப்பணியில் நாள் ஒன்றுக்கு 2000 க்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகள் பயன் படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை துறைமுகத்தில் உள்ள தனியார் ஒப்பந்த நிறுவனம் குறைந்த எண்ணிக்கையில் கன்டெய்னர் லாரி வைத்துள்ள உரிமையாளர் களுக்கு பணிகளை வழங்குவது இல்லை என்றும், அப்படி அவர்களுக்கு வழங்கப்பட்டாலும் சரக்குகளை ஏற்றுவது காலதாமதம் ஏற்படுகிறது என்றும் கூறி இதனைக் கண்டித்து கடந்த 29 ம் தேதி முதல் கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சென்னை துறைமுக பொறுப்புக் கழக அதிகாரியிடம் கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட வில்லை. இதனால் நேற்று 3 வது நாளாக வேலை நிறுத்தம் நீடித்தது. இந்த வேலை நிறுத்தத்தால் பல கோடி மதிப்புள்ள சரக்குகள் துறைமுகத்தில் தேங்கி கிடக்கின்றன.
காசிமேட்டில் இருந்து மாதவரம் வரை சுமார் 9 கிலோ மீட்டர் தூரம் வரை கன்டெய்னர் லாரிகள் நிறுத் தப்பட்டு உள்ளதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.