

கரோனா 3-வது அலை எச்சரிக்கை இருப்பதால் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் நடந்துவந்த மெகா கரோனா தடுப்பூசி முகாம் கூடுதலாக வியாழக்கிழமையும் நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 11 மெகா முகாம்கள் நடந்துள்ளன. வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடும் பணியும்நடந்து வருகிறது.
இந்நிலையில், 12-வது மெகாகரோனா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் இன்று நடக்க உள்ளது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் நடக்கும் முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.