

தேமுதிக, திமுக இடையே கூட்டணிக்காக நடத்தப்பட்ட பேரம் குறித்து விசாரணை நடத்தக்கோரி பாமக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்து புகார் மனு அளித்தார்.
அந்த புகார் மனுவில், “தேமு திகவை கூட்டணிக்கு இழுக்க ரூ.500 கோடியும், 80 தொகுதிகளும் தருவதாக திமுக பேரம் பேசியது. ஆனால் அதனை நிராகரித்துவிட்ட விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தார். இந்த செய்தி அனைத்து முன்னணி ஆங்கிலம் மற்றும் தமிழ் பத்திரி கைகள், இதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியா னது. இந்த குற்றச்சாட்டுக்கு திமுக தலைவர் கருணாநிதி மறுப்பு தெரிவித்தார். வைகோ வுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப் பப்பட்டது. இதனை சட்டப்படி சந்திப்பதாக வைகோ தெரிவித் துள்ளார். இதன் மூலம் திமுக, தேமுதிக இடையே பேரம் நடந்ததாக தெரிகிறது. தேர்தல் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையே போய்விடும். மக்களுக்கு வாக்களிக்கும் ஆர்வம் குறைந்து, வாக்குப் பதிவு குறைந்து விடும். இந்த குற்றச்சாட்டு தொடர் பாக திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ ஆகியோர் மீது மக்கள் பிரதிநிதித் துவ சட்டப்பிரிவு 123-ன் கீழ் விரைவாக விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப் பிடப்பட்டுள்ளது. புகார் மனுவின் நகல் தலைமை தேர்தல் ஆணை யருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.